நாட்டின் 77வது குடியரசு தின விழா இன்று (26.01.2026) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகத் தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள உழைப்பாளர் சிலை அருகில் இன்று காலை 8 மணியளவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இந்த குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.
இந்த தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் மாளிகையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, அதிமுக, பா.ஜ.க ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. ஏற்கெனவே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்யப்பட்ட நிலையில், தமிழக அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/26/rnra-2026-01-26-12-55-21.jpg)