வெள்ளோட்டில் இன்று காலிங்கராயன் சிலையை தமிழ்நாடு முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். 

Advertisment

இதுகுறித்து ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான சு.முத்துசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியம் வெள்ளோடு ராசா கோவில் அருகில் ‘நதிநீர் இணைப்பின் முன்னோடி’ என போற்றப்படுகின்ற காலிங்கராயன் சிலை வைக்க நிலம் வாங்கப்பட்டு, அங்கு 7 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. 

Advertisment

சிலையின் கீழ் பகுதியில் காலிங்கராயன் வரலாறு குறித்த நூல்கள் மற்றும் போட்டி தேர்வில் பங்குபெறுபவர்கள் பயன்படுத்தும் நூல்கள் அடங்கிய நூலகமும் காலிங்கராயன் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. காலிங்கராயன் சிலையையும், நூலகத்தையும் தமிழ்நாடு முதல்வர் 18ம் தேதி காலை 9 மணியளவில் காணொலி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில், காலிங்கராயன் உறவுகளும், விவசாயிகளும், பொதுமக்களும், திமுக மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு, அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பிஎல்ஏ2, பிஎல்ஏசி, பிடிஏ, கூட்டணி கட்சியினர், தோழமை அமைப்புகள், அனைத்து கட்சிகளின் சகோதர, சகோதரிகள் கலந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.