Tamil Nadu Chief Minister M.K. Stalin's post on the occasion of Language Martyrs' Day
கடந்த 1965-ல் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட இந்தி திணிப்பு நடவடிக்கையை எதிர்த்து, தமிழ் மொழியை காக்க உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று (25-01-26) மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலையிலேயே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள். அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை. மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்று திரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது.
இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது. தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன்.மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது, இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us