Advertisment

'தமிழ் அறிவு வளாகம்' அமைக்கும் திட்டம் : சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில் ரூ. 25 லட்சம் நன்கொடை!

ed-sakthi-masala

சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளை சார்பில் உலகத்தமிழ் ஆவணங்கள் அனைத்தையும் ஓரிடத்தில் வைத்துப் பாதுகாக்கவும், ஆராய்ச்சியாளர்களுக்கும் மக்களுக்கும் என்றென்றும் பயன்படும் விதத்தில் உரிய கட்டுமானங்களை ஏற்படுத்தி நிரந்தர திட்டமாகத் தமிழ் அறிவு வளாகம் உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்கான நிலம் மற்றும் நிதி உதவியையும் தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது. கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. 

Advertisment

இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிட மேலும் 40 கோடி ரூபாய் தேவை என ரோஜா முத்தையா நூலக அறக்கட்டளை அறிவித்து உள்ளது. வெளியூர்,தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் இதற்கான நன்கொடை வழங்கி வருகின்றன. இந்த நன்கொடை திரட்டும் முயற்சியில் ஒன்றாக ஈரோட்டில் சக்தி மசாலா நிறுவனமும், மக்கள் சிந்தனை பேரவையும் இணைந்து கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. மக்கள் சிந்தனை பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார். சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் அறிமுக உரை ஆற்றினர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக ரோஜா முத்தையா நூலக அறக்கட்டளை இயக்குநர்களான ஒரிசா முன்னாள் முதன்மை செயலாளர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன், சுந்தர் கணேசன் ஆகியோர் பேசினர். 

Advertisment

வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தலைவர் சிவசேனாதிபதி, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கம் பேரவை முன்னாள் தலைவர் கால்டுவெல் வேள்நம்பி, ஒளிரும் ஈரோடு தலைவர் எம்.சின்னசாமி, வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி சந்திரசேகர், புவனேவர் தமிழ்ச் சங்க தலைவர் துரைசாமி, கோவை அப்பாவு, விஜயா பதிப்பகம் மூ. வேலாயுதம் உள்ளிட்டோர் பேசினர். இந்நிகழ்ச்சியில் சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில் திட்டத்திற்கான நன்கொடையாக அதன் நிர்வாக இயக்குநர்கள் பி.சி. துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் ரூ.25 லட்சத்துக்கான காசோலையை ரோஜா முத்தையா நூலக அறங்காவலர்களான ஆர்.பாலகிருஷ்ணன் சுந்தர் கணேஷ் ஆகியோரிடம் வழங்கினர். அக்னி ஸ்டீல் சார்பில் ரூ.5 லட்சம், டாக்டர் கே.சீனிவாசன் ரூ.10 லட்சம் வழங்கினர். மற்றவர்களும் நன்கொடை வழங்குவதாகத் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் தொழில் முனைவோர், கொடையாளர்கள், சேவை அமைப்புகளின் நிர்வாகிகள், கல்வி நிலைய தாளாளர்கள் கலந்து கொண்டனர்.

Erode sakthi masala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe