செஞ்சி, சேத்துப்பட்டு பகுதியில் இருந்து மேல்மலையனூருக்கு திரும்பும் பாதையில் உள்ள வளத்தி என்ற ஊரில் 1000 ஆண்டுகள் பழமையான அருகர் புடைப்புச் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து சமண ஆய்வாளரான பேரணி ஸ்ரீதரன் கூறும் போது.. செஞ்சி, சேத்துப்பட்டு அருகில் உள்ள வளத்தி கிராமம் பற்றி அறியாதவர் அதிகம் இருக்க முடியாது. வேளாண்மை செய்திடும் விளைநிலங்கள் அருகிலேயே அமைந்த சிறிய, பெரிய மலைகள், பாறைகள், குன்றுகள், குகைகள் என்று நான்கு திசைகளிலும் இயற்கை வனப்பு நிறைந்த குறிஞ்சி நிலப்பகுதியாக விளங்குகிறது வளத்தி.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/01/a5408-2025-10-01-07-25-07.jpg)
இந்த ஊரில் வழிபாட்டில் உள்ள தமிழ் சமண அருகர் கோயில் ஒன்று நெடுஞ்சாலை அருகிலேயே உள்ளது. ஆனால் விளைநிலத்தின் அருகில் ஒரு சிறிய குன்றின் கீழ் இயற்கையாக அமைந்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருகர் சிற்பம் உள்ளது. இது பாறையில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. குகைப் பகுதியில் அமைந்துள்ள அருகரின் தலைக்கு மேல் நாகத்தின் ஏழு தலைகள் காணப்படுகிறது. தவக்கோலத்தில் நின்ற நிலையில் உள்ள இந்த சிற்பத்தின் உருவ அமைதி கி.பி.10,11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் காணப்படுகிறது.
நல்ஞானக்குன்று என்ற பெயரால் இந்த சமணர் குன்று அழைக்கப்படுமகிறது. இத்தகைய பழமையான தமிழ் சமணர் சான்றுகள் செஞ்சி மேல்மலையனூர் வட்டங்களில் 20 க்கும் கூடுதலான இடங்களில் இருப்பது உள்ளூர் மக்களாலும் கூட எத்தகைய தடயம் என அறியப்படாத தொன்மையாகவே இருக்கின்றது என்றார்.