Talks on the Iran-US nuclear deal tomorrow
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் குறித்தான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வருகின்றன. அதன் காரணமாக இருநாடுகளுக்கிடையே தொடர்ந்து கருத்து முரண்பாடு இருந்து வந்தது. இந்த முரண்பாடு காலப்போக்கில் இரு நாடுகளுக்கிடையிலான போராக மாறும் சூழல் நிலவி வந்தது. இந்த சுழலில் தான், சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா, தனது போர்க்கப்பலை (ஆபிரகாம் லிங்கன்) ஈரான் நாட்டிற்கு அனுப்பி வைத்தது. அந்த போர்க்கப்பலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இந்த போர் நடைபெறாமல் போனதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்க ஆகிய இருநாடுகளும் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இந்த பேச்சுவார்த்தை நாளை (06-02-26) ஓமன் நாட்டில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதில், அமெரிக்கத் தரப்பில் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா், சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரும், ஈரான் தரப்பில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கலந்து கொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
இருநாடுகளும் பேச்சுவார்த்தைக்குச் சம்மதம் தெரிவித்துள்ள போதிலும் கிழக்கு பிராந்தியத்தில் இன்னும் பதற்றமான சூழலே நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆபிரகாம் லிங்கன் என்ற அமெரிக்கப் போர்க்கப்பல் ஈரானுக்கு வந்துள்ளது. இந்த போர்க்கப்பலை நோக்கி வந்த ஈரானின் ட்ரோன்களை அமெரிக்கப் படை சுட்டு வீழ்த்தியது. இதனால், போர் மூளும் சூழல் இருப்பதாக உலக நாடுகள் பதற்றத்திலிருந்து வருகிறது. இந்த சமயத்தில், இந்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டிருப்பது கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சவூதி அரேபியா, கத்தாா் போன்ற நாடுகள் கிழக்கு பிராந்திய அமைதியைக் கருத்தில் கொண்டு இப்பேச்சுவார்த்தையில் ஆர்வம் கட்டி வருகின்றன.
Follow Us