மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம், கடந்த 16ஆம் நூற்றாண்டில் டென்மார்க் ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட டேனிஷ் கோட்டைக்குள் செயல்பட்டு வருகிறது.  அங்கு டேனிஷ் காலத்து நாணயங்கள், தமிழ் பத்திரங்கள் மற்றும் பழங்காலப் பொருட்கள்  தொல்லியல் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

Advertisment

இந்த பொருட்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் டேனிஷ்கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் போர்வாள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த போர்வாள் மாயமாகியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisment

அதாவது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு எதன் அடிப்படையில் போர்வாள் மாயமானது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டேனிஸ் கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட்டிருந்த போர்வாள் மாயமான சம்பவம் தொல்லியல் அறிஞர், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெறும் பரபரப்பையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.