Advertisment

திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்-பூத் ஏஜென்ட் மாநாட்டில் சஸ்பென்ஸ்

b9

Suspense at AIADMK former minister-booth agent meeting to join DMK Photograph: (dmk)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

தொடர்ந்து பூத் கமிட்டி மாநாடுகளை திமுக நடத்தி வரும் நிலையில் திருப்பத்தூரில் திமுக வடக்கு மண்டல பூத் ஏஜென்ட் பயிற்சி மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் இருந்து ரயில் மூலம் ஜோலார்பேட்டை சென்ற முதல்வருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டார்.

Advertisment
b10
Suspense at AIADMK former minister-booth agent meeting to join DMK Photograph: (dmk)

இந்நிலையில் இன்று மாலை நடைபெறும் மாநாட்டில் முன்னாள் அதிமுக பெண் அமைச்சர் நிலோஃபர்கபில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுக மாநாட்டு திடலுக்கு திமுக பேட்ஜ் உடன் நிலோஃபர் கபில் வந்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுகவில் ஜெ.தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற நிலோஃபர் கபில், சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். தற்போது அதிமுகவில்  கட்சி செயல்பாடுகளில் தீவிரம் காட்டாமல் இருந்த நிலோஃபர் கபில் திமுகவில் இணைய உள்ளார் எந்த தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் அதிமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த அன்வர்ராஜா திமுகவில் இணைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

minister nilofer kapil chief minister mkstalin dmk admk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe