கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே நடுக்கடலில் மீனவர்கள் மோதல். பலர் காயம். சினிமாவை மிஞ்சும் வகையில் மோதிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

Advertisment

கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் பகுதியில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற கடியப்பட்டணம் மற்றும் முட்டம் பகுதி மீனவர்கள் நடுக்கடலில் தாக்குதலில் ஈடுபட்டனர். சினிமாக் காட்சிகளை மிஞ்சும் வகையில் மீனவர்கள் நடுக்கடலில் மோதிக்கொண்டனர். இந்தக் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதில் 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து குளச்சல் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

சம்பவம் குறித்து குளச்சல் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோதலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இதுபோன்ற மோதல்களைத் தவிர்க்க, மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.