அண்மையில் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவரை விசாரிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்ட நிலையில் நாளை விசாரணை நடைபெற இருக்கிறது.

Advertisment

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியினுடைய தலைவர் எம்.எல்.ரவி என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.  இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு நீதிமன்ற தண்டனை அறிவித்திருந்தது. முன்னதாக இந்த வழக்கில் 2024 டிசம்பர் 23, 24ம் தேதிகளில் யாருடன் ஞானசேகரன் செல்போனில் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக முன்னாள் தமிழக பாஜக தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

Advertisment

இது தொடர்பான ஆதாரத்தை வைத்திருப்பதாக சொன்ன பாஜக முன்னாள் தலைவரை விசாரிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சியினுடைய தலைவர் எம்.எல்.ரவி சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர்  உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். உரிய முறையில் சிறப்புப் புலனாய்வுக் குழு எந்த வித பாரபட்சமும் இல்லாமல் விசாரணை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை  வைத்துள்ளார். இந்த வழக்கு நாளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகரத்னா மற்றும் மகாதேவன் அமர்வில்  விசாரணைக்கு வர உள்ளது.