Supreme Court orders street Dogs should be removed from bus stands
நாடு முழுவதும் பூதாரகரமாகியுள்ள தெரு நாய்கள் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உத்தரவில், தெரு நாய்களை பிடித்து உரிய தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்த பிறகு அந்த நாய்கள் எங்கு பிடிக்கப்படுகிறதோ அந்த விட்டுவிட வேண்டும் என்று கூறியிருந்தது.
மேலும், ரேபிஸ் நோய் பரப்பக்கூடியதாக கருதப்படும் நாய்களை பாதுகாப்பான காப்பகங்களில் உரிய முறையில்அடைத்து வைக்க வேண்டும் என்றும் தெருவோர நாய்களுக்கு உணவளிக்கக் கூடியவர்கள், அதற்கென ஒதுக்கப்பட்ட சில இடங்களில் மட்டுமே உணவுகளை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களும் இந்த வழிமுறைகளை வகுத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதாவது தெருநாய்கள் விவகாரத்தில் மாநிலத்தில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது போன்ற விஷயங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, கடந்த 3ஆம் தேதி அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், தெருநாய்கள் விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. நீதிபதி விகர்ம் நாத் தலைமையிலான அமர்வு வெளியிட்டுள்ள அந்த உத்தரவில், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனை வளாகங்களில் ஆகியவற்றில் இருந்து தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், வளாகங்களுக்குள் தெரு நாய்கள் நுழைவதை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் இரண்டு வாரங்களுக்குள் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வு சுகாதார நிறுவனங்களை அடையாளம் காண வேண்டும், இந்த வளாகங்களில் வேலிகள் அமைத்து பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வேலி அமைக்கும் பணிகளை 8 வாரங்களுக்கு முடிக்க வேண்டும் என்றும், விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையாக நெடுஞ்சாலைகளில் சுற்றி திரியும் விலங்குகள் குறித்து புகார் அளிக்க உரிய அவசர கால கட்டணமில்லா எண்ணை ஏற்படுத்த வேண்டும் என்றும், பொதுப்பணித்துறை, நகராட்சி மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து நெடுஞ்சாலைகளில் சுற்றி தெரியும் கால்நடைகளை உடனடியாக பிடித்து மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள நாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Follow Us