Supreme Court orders central government to respond Reduction in NEET cut-off
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்குத் தேசிய தேர்வுகள் வாரியம், நுழைவு (நீட்) தேர்வை நடத்தி வருகிறது. இதன்படி, எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர விரும்புபவர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அந்த வகையில், பள்ளிப் படிப்பை முடித்து மருத்துவம் படிக்க நினைப்பவர்கள் மற்றும் மருத்துவத்தில் மேல் படிப்பில் சேர விரும்புபவர்கள் என அனைவரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புகளைப் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் முதுகலை தேர்வில் தகுதி மதிப்பெண் ( கட் ஆப் மார்க் ) பூஜ்ஜியத்திற்கும் கீழாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தேசிய தேர்வுகள் வாரியம் கடந்த மாதம் 13ம் தேதி அறிவித்திருந்தது. இதன்படி, நீட் தேர்வில் பூஜ்ஜிய மதிப்பெண் எடுத்தவர்கள் கூட எம்.டி.எம்.எஸ் போன்ற மருத்துவ மேற்படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மருத்துவ கல்வித்தரம் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாக, இந்த அறிவிப்பை எதிர்த்து ஹரிசரண் தேவ்கான் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவின் மீதான விசாரணை இன்று, நரசிம்மா உள்ளிட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், கட் ஆப் மார்க் குறைக்கப்பட்டது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், இது குறித்துப் பதிலளிக்க மத்திய அரசிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Follow Us