Sulfuric acid tank explodes, two injured Photograph: (mettur)
மேட்டூரில் தொழிற்சாலை ஒன்றில் சல்ஃப்யூரிக் அமிலத் தொட்டி வெடித்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு வட மாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் பல்வேறு சிறு சிறு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் மெக்னீசியம் சல்பேட் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் திடீரென சல்ஃப்யூரிக் அமில தொட்டி வெடித்துச் சிதறியது. இதனால் பயங்கர சத்தம் ஏற்பட்டது. சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் இந்த பயங்கர சத்தம் காரணமாக அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதில் அங்கு பணியில் இருந்த இரண்டு வட மாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Follow Us