சுதாவுக்கு வயது 37 ஆகிறது. இவருக்குப் பல போலி முகங்கள் உண்டு.விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையின் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO - காரியாபட்டி ஒன்றியம்) போன்ற போலி அடையாளங்களுடன் வலம் வருபவர். மேலும், விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் தனிப்பட்ட முறையில் காரியம் சாதிக்கக்கூடியவர் என்றெல்லாம் சுதாவை ‘பில்டப்’ செய்து அறிமுகப்படுத்தக்கூடிய பொறியாளர் சங்கரநாராயணன், சுதாவின் தந்தை வெங்கட்ராமானுஜம், உதவியாளர் பீமா பேகம் போன்றோர் இவருடைய பின்னணியில் இருந்துள்ளனர்.
சிவகாசி பேராபட்டியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கண்ணன். இவர் நந்தினி பிரிண்டோகிராப், சிவா கலர் கிராபிக்ஸ், சிவா கிரானைட் & டைல்ஸ் போன்ற நிறுவனங்களை நடத்தி வருகிறார். மேலும், அறக்கட்டளை மூலம் முதியோர் காப்பகம் நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
கண்ணனின் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரியும் சங்கரநாராயணன் மூலம் சுதா கண்ணனுக்கு அறிமுகமாகிறார். பிறகென்ன? “அடுத்து பதவி உயர்வுபெற்று சிவகாசி யூனியன் அலுவலகத்துக்கு BDO-வாக வரப்போகிறார். முதியோர் காப்பகம் நடத்த மாவட்ட கலெக்டரிடம் அனுமதி வாங்கித் தருவார். பேராபட்டி ரோடு கான்ட்ராக்ட் கிடைக்க வழிசெய்வார்.” என்றெல்லாம் சுதாவின் அருமை பெருமைகள் எடுத்துவிடப்பட, ரூ.55,42,043 வரை சுதாவிடம் கொடுத்து ஏமாந்திருக்கிறார் கண்ணன்.
விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கண்ணன் புகாரளிக்க, சுதாவும் அவருடைய தந்தை வெங்கட்ராமானுஜமும் கைதாகியுள்ளனர். வழக்கில் சம்பந்தப்பட்ட சங்கரநாராயணன், பீமா பேகம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/01/untitled-1-2025-11-01-18-28-14.jpg)