அதிமுக - பாஜக கூட்டணியில் தினகரன் இணைந்ததை அடுத்து தன்னையும் அந்த கூட்டணியில் இணைக்க மோடியும் அமித்ஷாவும் உதவி செய்வார்கள் என நினைத்திருந்தார் ஓபிஎஸ். ஆனால், அதற்கான எந்த முயற்சியும் அவர்கள் எடுத்ததாக ஓபிஎஸ்சுக்கு தகவல் கிடைக்கவில்லை. இதனால் வெக்ஸ் ஆகிப்போனார் ஓபிஎஸ்.

Advertisment

அதேசமயம், பாஜகவின் மதுராந்தகம் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வந்தபோது, அதில் என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் மேடையேறுவார்கள் என சொல்லப்பட்ட போது, அந்த மேடையில் தனக்கும் இடம் கிடைக்கும் என ஓபிஎஸ் எதிர்பார்த்தார். ஏமாற்றம் தான் மிஞ்சியது. இதையடுத்து, அமித்ஷாவிடம் பேச ஓபிஎஸ் எவ்வளவோ முயற்சித்தும் பேச முடியவில்லை. இது தன்னை அவமானப்படுத்துவதாக நினைத்தார் ஓபிஎஸ்.

Advertisment

இந்நிலையில், திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஓபிஎஸ்ஸின் எதிர்பார்ப்பு வேற லெவலில் இருந்ததால், அவரை வெயிட்டிங்கில் வைப்போம் என திட்டமிட்டு, ஓபிஎஸ்சுக்கு உறுதியான எந்த பதிலையும் திமுக தரவில்லை. இதிலும் ஓபிஎஸ் வெக்ஸ் ஆகிப் போனாராம். இப்படிப்பட்ட சூழலில், த.வெ.க. கூட்டணியில் சேர, செங்கோட்டையனிடம் விவாதித்தார் ஓபிஎஸ். விவாதத்தில் ஓபிஎஸ்சுக்கு சாதகமான சில விஷயங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாம். இதனையடுத்து விஜய்யுடன் கைகோர்க்கத் தயாராகிவிட்டார். "த.வெ.க.வுடன் கூட்டணி என்பதை அறிவிக்கவிருக்கிறார் ஓபிஎஸ்" என்கிற தகவல்கள் தற்போது கிடைக்கின்றன.