Sudden turn in of female LIC manager - Police shocked Photograph: (police)
மதுரையில் பெண் எல்ஐசி அதிகாரி உயிரிழந்த சம்பவத்தில் அடுத்தடுத்து திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது.
மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதியில் எல்ஐசி கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2025 டிசம்பர் 17ஆம் தேதி அந்த எல்ஐசி அலுவலகத்தில் மாலை வேளையில் திடீரென என தீ விபத்து ஏற்பட்டது. அந்த பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் உள்ளே சென்று பார்த்த பொழுது ஒரு பெண் தீயில் கருகி உயிரிழந்து தெரியவந்தது.
இறந்தது அந்த எல்ஐசி கிளையின் முதுநிலை மேலாளராக பணியாற்றி வந்த கல்யாணி நம்பி என்பது தெரியவந்தது. ஒரு மகன் ஒரு மகள் உள்ள நிலையில் கல்யாணி நம்பி பொன்மணி நகர்ப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று எப்படி தீப்பிடித்தது என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதே அலுவலகத்தில் உதவி நிர்வாக அலுவலராக இருந்த ராம் என்பவருக்கும் இந்த தீ விபத்தில் காயம் ஏற்பட்டிருந்தது. தனியார் மருத்துவமனையில் ராம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தன்னுடைய அம்மாவுடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கல்யாணியினுடைய மகன் திலகர்திடல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். தீ விபத்து நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அம்மா என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதற்றத்துடன் பேசியதாகவும், காவல்துறையை உடனே அழைத்து வர வேண்டும் எனக்கு கட்டளையிட்டதாகவும் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் அந்த அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் நிர்வாக உதவியாளரான ராமின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியானது. கல்யாணி தீ விபத்தில் இறக்கவில்லை என்பது தான் அந்த அதிர்ச்சி தகவல். பெட்ரோல் ஊற்றி அவர் எரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருநெல்வேலியில் இருந்து பதவி உயர்வு பெற்று மதுரை எல்ஐசி கிளைக்கு முதுநிலை மேலாளராக கல்யாணி பொறுப்பேற்று இருந்தார். உதவி நிர்வாக அதிகாரியாக இருந்த ராமின் ஆவணங்களில் குளறுபடிகள் இருப்பதை பார்த்த கல்யாண நம்பி அதை கண்டித்து வந்துள்ளார். இந்த ஆத்திரத்தில் அலுவலகம் முடிந்து அனைவரும் வீட்டிற்கு சென்ற பிறகு ஆவணங்களை அழிக்க ராம் முயன்றுள்ளார். இதைப் பார்த்த கல்யானி, ஆவணங்களை மீட்டு போலீசாரிடம் ஒப்படைக்க முயன்றுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெட்ரோல் ஊற்றி ராம் கல்யாணி நம்பிக்கையை எரித்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் நடந்ததை தீ விபத்து போல் சித்தரிக்க அலுவலகத்திற்கு ராம் தீ வைத்ததும் தெரியவந்துள்ளது.
Follow Us