Sudden sinkhole in Koyambedu; Pipe bursts, sewage leaks out Photograph: (koyampedu)
சென்னை கோயம்பேடு பகுதியில் ஏற்பட்டுள்ள ராட்சத பள்ளத்தில் கழிவுநீர் குழாய் உடைந்து கழிவுநீர் வெளியேறி வருவதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம் நோக்கி செல்லக்கூடிய பிரதான சாலையில் சாலை ஓரத்தில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதில் கழிவுநீர் கால்வாய் உடைந்து வெளியேறிய கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது. அந்த பகுதியில் மெட்ரோ இரண்டாம் கட்ட பணி நடைபெற்று வருவதால் சாலை சேதம்டைந்தது.
இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகமான வாகனங்கள் வராததால் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கோயம்பேடு போக்குவரத்து போலீசார் தற்காலிகமாக அந்த பகுதியில் இரும்பு தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.