டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருந்து முதல்வர் ரேகா குப்தா இன்று (20-08-25) காலை பொதுமக்களை சந்தித்து அவர்களை குறைகளை கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், முதல்வர் ரேகா குப்தா மீது திடீரென்று கடுமையாக தாக்குதல் நடத்தினார். இதில் முதலமைச்சர் ரேகா குப்தாவிற்கு முகம் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனை கண்ட பாதுகாப்பு படையினர், அந்த நபரை உடனடியாக பிடித்து கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.