Sudden fire at private hotel in chidambaram
சிதம்பரம் நகரம் வேணுகோபால் தெருவில் ஆர் கே ரெசிடென்சி என்ற சொகுசு தனியார் ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று (25-02-26) மாலை இந்த ஹோட்டலின் மாலை மேல் தளத்தில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பெரிய அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி கட்டிடத்தில் முன் பகுதி மற்றும் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடங்கள் அனைத்தும் எரிந்தது.
இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக சிதம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் இரண்டு தீயணைப்பு வாகனம் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் வைத்தனர். இதில் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த ஹோட்டல் இருக்கும் தெரு, பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழி என்பதால் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக தடை செய்து மாற்று வழியில் அனுப்பி வைத்தனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Follow Us