நள்ளரவில் ரயிலில் திடீரென தீ பற்றி எறிந்ததால் பெண் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து கேரளா மாநிலம் எர்ணாகுளம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் ஆந்திரா மாநிலம் அனகப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்த போது, 2 ஏ.சி. பெட்டிகளில் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், உடனடியாக அபாய சங்கிலியை இழுத்துள்ளனர்.

Advertisment

இதைத் தொடர்ந்து, உடனடியாக அருகே உள்ள ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு தீ விபத்து குறித்து ரயில்வே துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு வந்த ரயில்வே துறையினர், தீ பற்றி எரிந்த 2 பெட்டிகளில் இருந்த பயணிகளை உடனடியாக மீட்டனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில் ரயிலில் தீ பரவாமல் இருக்க, தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தீ விபத்தைத் தொடர்ந்து ரயிலை உடனடியாக நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

Advertisment