வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் LLB இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களில் 72 பேரை கல்லூரி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்றும், இதனால் ஓராண்டு வீணாகி அடுத்த ஆண்டும் பயிலும் சூழல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கல்லூரியின் முதல்வர் உட்பட 4 பேராசிரியர்கள் மாணவர்களிடையே சாதி, மத வேறுபாடு பார்ப்பதாகவும் அவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறி அமைச்சர் இடத்தில் கோரிக்கை வைப்பதற்காக சுமார் 50 - க்கும் மேற்பட்ட அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீரென காட்பாடியில் உள்ள சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் குவிந்தனர். அவர்களை அமைச்சர் துரைமுருகனை அழைத்துப் பேசினார்.

Advertisment

தங்கள் பிரச்சனை குறித்து, அமைச்சர் துரைமுருகனிடம் தெரிவித்ததாகவும் இதற்கு அமைச்சர் சென்னையில் உள்ள அதிகாரிகளிடத்தில் பேசியதாகவும், 72 மாணவர்களும் தேர்வு எழுத உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் அமைச்சர் வீட்டில் இருந்து கலைந்து சென்றனர்.

Advertisment