கடந்த 2020ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர். 700க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த கலவரம் குறித்து 100க்கும் மேற்பட்ட வழக்ககள் பதிவு செய்யப்பட்டன. குறிப்பாக கலவரத்தை தூண்டிவிட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட முயற்சி செய்ததாக கூறி மாணவர் சங்கத் தலைவர் உமர் காலித் உட்பட 7 பேரை கைது செய்தது டெல்லி காவல்துறை. மேலும், உமர் காலித் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisment

கைது செய்யப்பட்ட உமர் காலித், ஷர்ஜில் இமாம், குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிபா உர் ரகுமான், முகமது சலீம், ஷதாப் அகமது ஆகிய எழுவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் நிலையில் தங்களுக்கு ஜாமீன் வேண்டி மனு அளித்திருந்தனர். இவர்களின் ஜாமின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் 2 முறை நிராகரித்துவிட்டது.

Advertisment

இந்த நிலையில், உமர் காலித், டீ ஷர்ஜில் இமாம் உள்ளிட்ட 7 பேரும் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், உமர் காலித், ஜர்ஜில் இமாமுக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தது. உமர் காலித், ஜர்ஜில் இமாமுக்கு இவர்களின் செயல் தீவிரவாத செயல்பாடுகளோடு தொடர்புடையதாகக் கருதப்படுவதால், அவர்களுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. 5 ஆண்டாக சிறையில் இருக்கும் உமர் காலித், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மேலும் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும், உமர் காலித், ஷர்ஜில் இமாம் ஆகியோர் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிபதிகள் அர்விந்த் குமார் மற்றும் என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு, உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டியது. இவர்களின் செயல்பாடுகள் போராட்டத்தை தூண்டும் வகையில் இருந்ததாகக டெல்லி காவல்துறையும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் ஒப்பிடுகையில் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் செயல்பாடுகள் தீவிரமாக இருந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அதே சமயம், உமர் காலித், ஷர்ஜில் இமாம் தவிர குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிபா உர் ரகுமான், முகமது சலீம், ஷதாப் அகமது ஆகிய ஐந்து பேருக்கும் உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Advertisment

சிறையில் உள்ள உமர் காலித்துக்கு நியூயார்க் மேயர் மம்தானி அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். உமர் காலித் மீது நியாயமான விசாரணை நடத்த அமெரிக்க எம்.பி.க்கள் குழுவும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த வழக்கு உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.