தேனி மாவட்டம், போடி தாலுகாவில் உள்ள திம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் அரவிந்த் என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியராக அரவிந்த் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், ஆசிரியர் அரவிந்த் வேறு பள்ளிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த உத்தரவு சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஆசிரியர் அரவிந்த் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் வந்த போடி தாலுகா காவல்துறையினர் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பிவைத்தனர்.