கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, ஆசிரியர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக மாணவிகள் ஆடியோ மற்றும் வீடியோ வெளியிட்டு புகார் அளித்துள்ளனர். அந்த வீடியோவில், பள்ளியின் இரண்டு ஆசிரியர்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், ஆசிரியர்கள் சிலர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதாகவும் கூறினர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.