திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவலாங்காடு ஒன்றியம் லட்சுமி விலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது முடிவடைந்த ராகுல், இதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவன், 15 வயது மாணவன் ஒருவன் ஆகியோர்கள் கஞ்சா போதையில் கைகளில் கத்தியை வைத்துக் கொண்டு அந்த பகுதியில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருப்பது வழக்கம். 

Advertisment

சம்பவத்தன்று பொழுது பாகாசாலை கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அமித், மற்றும் அவரது நண்பர் அன்பரசன், ஆகிய இருவரும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்த போது, இவர்களை தடுத்து நிறுத்தி சண்டையிட்டு கஞ்சா போதை மூன்று சிறுவர்கள் கைகளை கத்தியில் வைத்துக்கொண்டு இரண்டு கல்லூரி மாணவர்களை கடுமையாக வெட்டி சாய்த்து உள்ளனர். இதில் இரண்டு கல்லூரி மாணவர்களும் உடலில் பலத்த காயமடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் மாணவர்கள் உள்ளனர் .

Advertisment

இந்த சம்பவம் குறித்து திருவலங்காடு போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த திருவாலங்காடு போலீசார் இரவு மற்றும் பகல் வேலைகளில் ரோந்து பணிகளில் ஈடுபடுவதில்லை. இந்த பகுதியில் அதிகளவு கஞ்சா பழக்கம் ஏற்பட்டு மாணவர்கள்  கஞ்சாவுக்கு அடிமையாகி இந்த பகுதியில் குற்ற சம்பவங்களில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்காததால் இந்த பகுதியில் இன்று ஏற்பட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சாதாரணமாக கல்லூரி மாணவர்கள் சாலையை கடந்து கொண்டிருந்தவர்களை வம்பு இழுத்து சண்டையிட்டு அவர்களை கத்தியால் வெட்டி படுகாயத்தை ஏற்படுத்தி ஆபத்தான நிலையில் மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ள இந்த சம்பவம் கஞ்சா போதை ஆசாமிகள் கையில் கத்தியுடன் ரீலீஸ் எடுக்கும் இந்த சம்பவம் தடுக்க வேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக இந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர். 

Advertisment

குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு போலீசார் முன் வர வேண்டும் குற்ற சம்பவங்களை நடந்த பிறகு போலீசார் வேடிக்கை பார்க்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்