புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் காரைக்கால் வளாகத் தலைவராக செயல்பட்டு வந்த பேராசிரியர் மாதவைய்யா மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் எழுந்ததைத் தொடர்ந்து, தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டங்களை ஒட்டி, அவர் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், அவரைப் பாதுகாக்கும் நோக்கில், பல்கலைக்கழக நிர்வாகம் அவரை அந்தமான் வளாகத்திற்கு பணியிட மாற்றம் செய்தது.
இந்நிலையில், அந்தமான் வளாக மாணவர்கள், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியருக்கு அந்தமான் வளாகத்தில் இடமில்லை, அவர் அங்கு பணியை மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தி, கையெழுத்திட்டு வளாகத் தலைவருக்கு கடிதம் அளித்துள்ளனர். மேலும், அவர் அங்கு பணிபுரிந்து, பாடம் நடத்தினால், “நாங்கள் வகுப்பைப் புறக்கணிப்போம்” என்றும் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2025/10/25/untitled-1-2025-10-25-18-49-35.jpg)