ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கடத்தூர் இடையன்குட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்குத் திருமணம் ஆகி 2 இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பிரவீன் (வயது 11). நேற்று முன்தினம் (06.09.2025) பிரவீன், அவரது தம்பி, அண்ணன் மகனுடன் தனது தந்தையின் மோட்டார் சைக்கிளில் முடி வெட்டும் கடைக்குச் சென்று முடியை விட்டுவிட்டு தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
அப்போது ஆண்டிபாளையம் கீழ்பவானி வாய்க்கால் பகுதி பிரவீன் ஒடி சென்று வாய்க்காலில் இறங்கினார். அப்போது பிரவினை தண்ணீர் இழுத்துச் சென்றது. இதை பார்த்து கரையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். அதே சமயம் அங்கு உடன் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. இந்நிலையில் நேற்று (07.09.2025) வாய்க்காலில் மிதந்து வந்த பிரவீன் உடலை மீட்டனர்.
அதன் பின்னர் பிரவீன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.