வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து காட்பாடி பேருந்து நிலையம் வரை 9 ஆம் நெம்பர் அரசு பேருந்து பயணிகளை ஏற்றி சென்று வருகிறது. இந்த நிலையில் இன்று காட்பாடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவி ஒருவர் காட்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து குடியாத்தத்திற்கு செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது கேவிகுப்பம் பேருந்து நிலையத்தில் மது போதையில் இளைஞர் ஒருவர் அரசு பேருந்தில் ஏறி கல்லூரி மாணவி அமர்ந்திருந்த இருக்கை அருகில் உட்கார்ந்து அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.இதில் பேருந்தில் பயணம் செய்த சக பெண்கள் மற்றும் இளைஞர்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து குடியாத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டத்தில் அவன் குடியாத்தம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பதும் இவன் கட்டிட தொழிலாளி என்பது தெரிய வந்தது. மேலும் சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவியிடம் மது போதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்க்கு தர்ம அடி கொடுத்த சம்பவம் குடியாத்தம் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow Us