மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது  நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் காவல் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மாணவிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மாணவியின் உறவினர்கள் இது தொடர்பாக அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதோடு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.