பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதல்வர் படத்துடன் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மாணவர் ஒருவர் பட்டம் பெற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 87வது பட்டமளிப்பு விழா இன்று (02-02-26) நடைபெற்றது. இந்த விழாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தரான தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

Advertisment

இந்த விழாவின் போது புஷ்பராஜ் என்ற மாணவர், பட்டம் பெறுவதற்காக மேடையில் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது பெயரை பல்கலைக்கழக குழுவினர் அழைத்தவுடன், அவர் தனது கையில் கொடுக்கப்பட்ட பட்டத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை இணைத்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற்றார். மாணவர் புஷ்பராஜின் இந்த செயலால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் முழு சோதனைக்குப் பிறகே மற்ற மாணவர்கள் மேடையேற அனுமதிக்கப்பட்டனர்.

ஏற்கெனவே கடந்த ஆண்டின் போது திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது, ஜூன் ஜோசப் என்ற மாணவி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து பட்டம் பெற மறுத்த சம்பவம் பேசுபருளாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment