Advertisment

‘பல்கலைக்கழக போராட்டம் மக்களின் போராட்டமாக மாறும்’ - அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்!

an1

struggle of Annamalai University professors and employees will turn into a people's struggle

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களின் கூட்டமைப்பு சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து பணியை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் கடந்த 23 நாட்களுக்கு மேலாக ஈடுபட்டு வந்தனர். ஆனால் இவர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Advertisment

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் பணிக்கு கையெழுத்திடாமல் வகுப்பறைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வருவதில்லை, இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது. இதனையும் அரசு கண்டுகொள்ளவில்லை என சிதம்பரம் நகரத்தில் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

an2

இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ் பாபு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மல்லிகா, சிஐடியு மாவட்ட நிர்வாகி சங்கமேஸ்வரன், ஓய்வூதிய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மாவட்ட நிர்வாகி கலியமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மணவாளன், தமிழ் வளவன், மாவட்டச் செய்தி தொடர்பாளர் சரித்திரன், அதிமுக மாவட்ட அவைத்தலைவர் எம்எஸ்என் குமார்,  நகரச் செயலாளர் செந்தில்குமார், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகி ராஜாசம்பத் குமார், மதிமுக பார்த்திபன் உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரினர். அண்ணாமலை பல்கலைக்கழகம் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ளதால் கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் சிதம்பரம் நகரம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் மக்களின் போராட்டமாக மாற்றப்படும் என தெரிவித்துள்ளனர்.

Annamalai University Chidambaram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe