திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுமார் 500க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது. புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு எனப் பல்வேறு மருத்துவத்துறைகளுடன் இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே சமயம் இங்கு ஒப்பந்த அடிப்படையில் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தூய்மை பணியாளர் மாலாவை மருத்துவமனையில் பணியாற்று செவிலியர் மீரா என்பவர் கண்ணத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மருத்துவமனையில் வளாகத்தில் உள்ள தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் செவிலியர் மீரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களிடம் மருத்துவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
முன்னதாக தூய்மை பணியாளர் மாலாவிடம் செவிலியர் மீரா அறையைச் சுத்தம் செய்ய கூறியதாகவும் அதற்கு மாலா கவனிக்காமல் சென்றதாகவும், இதனால் தான், மீரா மாலாவின் கண்ணத்தில் அறிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர் ஒருவரைச் செவிலியர் கண்ணத்தில் அறைந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/16/kpr-sanitary-workers-ins-2025-08-16-11-25-10.jpg)