தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன், கடந்த 2015 ஆம் ஆண்டு ஓஎன்சிசி நிறுவனத்தை தாக்கியதாக அவர் உள்ளிட்ட விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில், அவருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையொட்டி தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக விவசாயிகள் சிதம்பரம் காந்தி சிலை அருகே அவரது வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும் அவருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க தலைவர் மணி கொல்லை ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் அன்பழகன், சங்க நிர்வாகிகள் நாராயணசாமி, அறவாழி, கருப்பூர், சுரேஷ்குமார், ராஜாராமன், பன்னீர்செல்வம், முத்துராமன், லோகநாதன், அசோக்குமார் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பி.ஆர் பாண்டியன் மீது போடப்பட்ட வழக்க வாபஸ் வாங்க வலியுறுத்தியும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Advertisment