நாடு முழுவதும் தெரு நாய்களால் பொதுமக்கள் கடிபடும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் குறிப்பாக சிறார்கள் தெருநாய் கடியால் பாதிக்கப்படும் சம்பவங்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மளிகைக் கடைக்குள் புகுந்த இரண்டு தெரு நாய்கள் அங்கிருந்தவர்களை கடித்துக் குதறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியில் சாலை ஓரத்திலேயே சுந்தர் என்பவர் மளிகைப் பொருட்கள் மற்றும் பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அங்கு வந்த 2  தெரு நாய்கள் கடையில் இருந்த சுந்தரின் மனைவி மற்றும் அவருடைய மகனை கடிக்க முயன்றது. அவர்கள் அந்த நாய்களை துரத்த முயன்ற போதும் விடாமல் கடிக்கும் முயன்றதால் அவர்கள் அலறி அடித்துக்கொண்டு கடையை விட்டு ஓடினர். அதேபோல அந்த கடைக்கு பொருட்கள் வாங்க வந்த நபர்களையும் அந்த தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடித்தது. இந்த சம்பவத்தின் காட்சிகள் அனைத்தும் அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.