நாடு முழுவதும் தெருநாய் கடி மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் கடிபடுவது தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியில் சிறுமி ஒருவரை தெரு நாய் கடித்த நிலையில் ரத்தம் சொட்டச் சொட்ட சிறுமி அலறி துடித்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுச்சேரி மாநிலம் எஸ்.பி.பட்டேல் சாலையில் தனது பெற்றோர்களுடன் காத்திருந்த பொழுது அங்கு இருந்த தெருநாய் ஒன்று திடீரென சிறுமியின் கையில் கடித்துக் குதறியது. இதில் சிறுமியின் கையில் ரத்தம் சொட்டச் சொட்ட சிறுமி கதறி அழுதார். அவருடைய பெற்றோர்கள் அதேபகுதியில் நாடோடி வித்தை காட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது தெரிய வந்தது. தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.