நாடு முழுவதும் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் மனிதர்கள் நாய் கடிக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் தெருநாய்களை கட்டுப்படுத்த பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மனிதர்களை தெருநாய்கள் கடிக்கும் சம்பவங்களை தொடர்ந்து மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை குறிவைத்து தெருநாய்கள் கடிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/30/a5039-2025-08-30-10-09-38.jpg)
கடந்த 26 ஆம் தேதி திருவண்ணாமலை அருகே வந்தவாசி பகுதியில் 21 ஆடுகளை நாய்கள் கடித்துக் குதறி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தென்னாங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு சொந்தமான ஆட்டு பட்டிக்குள் புகுந்த 4 நாய்கள் கடித்துக் குதறியதில் 21 ஆடுகள் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதேபோல் மற்றொரு சம்பவமாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் லியாகத் அலிகான் என்பவருக்கு சொந்தமான 20 ஆடுகளை தெருநாய்கள் கடித்துக் கொன்றுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.