Stray dogs incident in telangana Photograph: (telangana)
நாடு முழுவதும் தொடர்ச்சியாக நாய் கடி சம்பவங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான பிரச்சினை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்த பிரச்சனை உச்ச நீதிமன்றம் வரை சென்றது. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி பல்வேறு உத்தரவுகளையும் வெளியிட்டது.
இருப்பினும் மறுபுறம் தெருநாய்களால் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் தனியாக சென்ற சிறுமி ஒருவரை சாலையில் படுத்திருந்த தெருநாய்கள் ஒன்றுகூடி கொடூரமாக கடித்துக் குதறிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய்கள் சுற்றிக் கடித்ததால் சிறுமி கூச்சலிட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து நாய்களை துரத்தி சிறுமியை மீட்டனர்.
Follow Us