நாடு முழுவதும்  ஏற்கனவே  தெரு நாய் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், திருவள்ளூரில் கடைக்குச் சென்ற சிறுவனை தெருநாய் ஒன்று கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பூங்கா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ரகு. இவருடைய 6 வயது மகன் பிரசாந்த் வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.  அப்பொழுது அங்கு இருந்த தெருநாய் ஒன்று சிறுவனை கடித்துக் குதறியுள்ளது. இதில்  சிறுவனின் கை, கால், தொடை என பல்வேறு இடங்களில் பயம் ஏற்பட்டது.

உடனடியாக அங்கு இருந்தவர்கள் நாயை விரட்டி விட்டு சிறுவனைக் காப்பாற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். தற்பொழுது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக திருவள்ளூர் நகராட்சியில் தெருநாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.