தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் போலீசார் பாதுகாப்புடன் ஆற்றில் கரைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று 1500 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நான்கு இடங்களில் போலீசார் பாதுகாப்புடன் கரைக்கப்பட உள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வினோதமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தீ நடனம் என்ற பெயரில் நடைபெற்ற சம்பவத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். குழந்தைகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்த நிலையில் இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளிலாக வருகிறது.