உத்தர பிரதேச மாநிலம் சோன் பத்ரா என்ற இடத்தில் கல் குவாரி செயல்பட்டு வந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் நேற்று (15.11.2025) எதிர்பாராதவிதமாக கல்குவாரியில் இருந்த பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. இந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் சிக்கி கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் பாறைகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்த நிலையில் தொழிலாளி ஒருவரின் உடலை மீட்புகுழுவினர் மீட்டுள்ளனர். மேலும் குவாரியின் இடிபாடுகளில் சிக்கியுள்ள மற்ற தொழிலாளர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கல்குவாரியில் இருந்த பாறைகள் சரிந்து விழுந்ததில் 15 தொழிலாளர்கள் சிக்கிய நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment