பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்த நாள் விழா இன்று (30-10-25) கொண்டாடப்படுகிறது. மேலும் அவரது 63வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (30.10.2025) நடைபெற்று வருகிறது. இதனால் முத்துராமலிங்க தேவரின் உருவச்சிலைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உபல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.
இந்த நிகழ்வையொட்டி, காலை முதலே ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனித் தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு முறையாக அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையிலேயே ராமநாதபுரம் பசும்பொன்னுக்கு வந்து முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், மூவேந்தர் முன்னேற்ரக் கழகத்தினுடைய தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், பசும்பொன் நினைவிடத்திற்கு வந்து முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தினார். அப்போது, அங்கு இருக்கும் வாரிசுதாரர்களாக இருக்கக்கூடிய பூசாரிகள், தேவருக்கு தீபாராதனை காண்பித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இவர்களை ஏன் உள்ளே வைத்திருக்கிறீர்கள், வெளியே அனுப்புங்கள் என ஸ்ரீதர் வாண்டையார் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் பூசாரிக்களுக்கும், ஸ்ரீதர் வாண்டையாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஸ்ரீதர் வாண்டையார், பூசாரி ஒருவரின் கன்னத்தில் அறைந்தார். இதனால் பூசாரிகள் தரப்பினருக்கும் ஸ்ரீதர் தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த சம்பவம் பரபரப்பான நிலையில்,ஸ்ரீதர் வாண்டையாருக்கு பூசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால்ஸ்ரீதர் வாண்டையார், தேவர் நினைவாலயத்திலேயே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட போலீசர், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அந்த பேச்சுவார்த்தைக்கு ஸ்ரீதர் வாண்டையார் உடன்படவில்லை. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சமயத்தில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துவதற்காக தேவர் நினைவிடத்திற்கு வந்தனர். அங்கு ஸ்ரீதர் வாண்டையார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததை கண்டு, உடனடியாக அவருடன் மூன்று பேரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர், தன்னுடைய போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து அங்கிருந்து கிளம்பினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/30/sridhar-2025-10-30-17-49-00.jpg)