தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை என தீவிரம் காட்டி வருகின்றனர். மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் சிறப்பு வாக்களார் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளன. இந்தப் பணியில் 75 ஆயிரத்து 50 அலுவலர்கள் ஈடுபடுவார்கள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். சிறப்பு வாக்களார் திருத்தப் பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் இருந்து அறிவிப்பு வந்தவுடன் அணைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு ஆலோசனைகள் கேட்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சிறப்பு வாக்களார் திருத்தப் பணிகளுக்காக வீடு வீடாகச் சென்று அதற்கான விண்ணப்பத்தை இதற்கென நியமிக்கப்படும் அலுவலர்கள் வழங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தர ஒரு மாத காலம் வரை அவகாசம் வழங்கப்படும்.
முன்னதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று (24.10.2025) காலை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தேர்தல் ஆணையத்தின் தரப்பில் வாதிடுகையில், “நாடு முழுவதும் தேர்தலை எதிர்கொண்டுள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பீகாரைப் போன்ற சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் அடுத்த வாரம் (நவம்பர் மாதம் முதல் வாரம்) முதல் துவங்கப்பட உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/24/eci-archana-patnaick-2025-10-24-15-48-03.jpg)