Advertisment

3.66 லட்சம் பேர் நீக்கம்; பீகாரில் வாக்காளர் சிறப்புத் திருத்த பட்டியல் வெளியீடு!

sir

Special revised voter list released in Bihar

பீகார் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது. அதாவது இந்த திருத்தத்தின்படி, 2003ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத அனைவரும் தங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்க வேண்டும் எனவும், இவர்களில் 1981 ஜூலை 1க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்களுடைய பெற்றோரின் பிறப்பிடம் சார்ந்த சான்றுகளை வழங்க வேண்டும் என்றும் இந்த சான்றிதழ்கள் இல்லாதோர் வாக்களிக்க தகுதியில்லாதவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதற்கு இந்தியா கூட்டணி அடங்கிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இதற்கிடையில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் முதல் கட்டமாக மொத்தம் 65.2 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கியது. நீக்கப்பட்ட வாக்காளர்களில் 22 லட்சம் பேர் இறந்துவிட்டதாகவும், 35 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டதாகவும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 1.2 லட்சம் பேர் இன்னும் தங்கள் படிவங்களை சமர்ப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்களை அளித்திருந்தன. அந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில், பீகார் வாக்காளர் சிறப்புத் திருத்த பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளார்களில் 21 லட்சம் பேர் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், 3.66 லட்சம் பேர் நீக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பீகாரில் மொத்தமாக 47 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் பீகாரில் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

election commission election commision of india Bihar special intensive revision
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe