மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்பயணத்தை மேற்கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.7ம் தேதி கோயம்புத்தூரில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில்,மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி அடுத்தவைத்தீஸ்வரன் கோயில் தருமபுர ஆதினத்திற்கு சொந்தமான ஸ்ரீ தையல்நாயகி உடலுறை வைத்தியநாத சுவாமி திருக்கோயிலுக்கு இன்று (18/07/2025) விசிட் அடித்தார்.

Advertisment

2026 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டி சுவாமி அம்பாள் அங்காரகன் செல்லமுத்துக்குமார் சுவாமி சன்னதிகளில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு பூஜைகள் செய்து மனம் உருகிவழிபாடு மேற்கொண்டார். சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதற்கு முன்னதாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் பூரண கும்ப மரியாதை எடப்பாடி பழனிச்சாமிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

தரிசனம் முடித்த எடப்பாடி பழனிச்சாமி,அவரது மகன் மிதுன் மற்றும் அவரது உறவினர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பரிவட்டம் கட்டி பிரசாதம் வழங்கினர். கோவிலில் நடந்த சிறப்பு பூஜைகள், கொடுக்கப்பட்ட மரியாதை, சாமி தரிசனம் ஆகியவை எடப்பாடியையும் அவரது குடும்பத்தினரும் மிகவும் மனம் குளிர வைத்துள்ளதாம்.