வார இறுதி மற்றும் பண்டிகை தினங்களில் தொடர் விடுமுறை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மிலாடி நபி, ஓணம் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து சொந்தவூர் செல்ல பொதுமக்கள் திட்டமிட்டு வருகின்றனர். தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் இதுபோன்ற பண்டிகை மற்றும் தொடர்பு விடுமுறை நாட்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுகிறது. இந்நிலையில் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்வதை தடுக்கும் வகையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழக முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், போக்குவரத்து சோதனைச் சாவடி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கொண்ட சிறப்புக் குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூலித்தல் மற்றும் அனுமதி இல்லாமல் இயங்கும் ஆம்னி பேருந்துகளில் தீவிரமாக சோதனை செய்து அ வாகனங்களை சிறை பிடித்து அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் இந்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து ஆணையர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.