Speaker Appavu's announced First Legislative Assembly Session of 2026
2026ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 20ஆம் தேதி தொடங்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று (26-12-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “2026ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஒப்புதலுடன் ஜனவரி 20ஆம் தேதி காலை 9:30 மணிக்கு கூடுகிறது. தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் வாசிப்பார்.
சட்டப்பேரவை மாண்பை ஆளுநர் ஆர்.என்.ரவி காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது, பேரவையின் மரபு மாற்றப்படாது. ஜனவரி 20ஆம் தேதியன்றே சட்டமன்ற அலுவல் ஆய்வுக் கூட்டமும் நடைபெறும். அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் கூறும் கருத்துக்களை உள்வாங்கி நல்ல முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
.
Follow Us