Advertisment

“தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும்?” - சபாநாயகர் அப்பாவு தகவல்!

appavu-pm-with-pitchandi

2026 - 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (17.02.2026) காலை 09:30 மணிக்கு கூடியது. அப்போது இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து வேளாண் இடைக்கால பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றினார். 

Advertisment

அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அறையில் அவரது தலைமையில் அனைத்து கட்சித் தலைவர்களும் கூடிய அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்த வேண்டும் என முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு  செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், “இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து வேளாண் இடைக்கால பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றினார். 

Advertisment

இதனையடுத்து நாளை (18.02.2026) மற்றும் நாளை மறுநாள் (19.02.2026) என இரு நாட்கள் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவதாம் நடைபெறும். இந்த இரு நாட்களும்  காலை கேள்வி பதிலுக்கான வினா விடைகள் நேரம் நடைபெறும். நாளை மறுநாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலளித்து பேசுவார்கள். அதன்படி வரும் 20 ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்” எனத் தெரிவித்தார். 

budget session speaker appavu tn budget Budget 2026
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe