கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி உடன் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுபெற்ற நிலையில் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூட இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ளார்.
Advertisment
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 26 ஒன்றின் கீழ் அடுத்த பேரவையினுடைய கூட்டமானது வருகின்ற அக்டோபர் 14ம் தேதி காலை மணிக்கு தலைமைச்செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் கூட்டியுள்ளேன். எத்தனை நாட்கள் கூட்டத்தொடரை நடத்துவது என அலுவல்  கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும். அன்றைய தினம் சபை ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டு இதுவரை மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுகு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். 2025-26 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்கள் மீதான மானிய கோரிக்கை சட்டமன்றத்தில் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்'' என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சபாநாயகர் அப்பாவு அரசியல் செய்வதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் வைத்த குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ''அரசியலில் வாக்கு வாங்கித்தானே சபாநாயகர் ஆகியுள்ளேன்'' என தெரிவித்தார்.