Advertisment

“விஜய்க்கு நான் உதவினேன்...” - எஸ்.பி வேலுமணி பேச்சு!

vijaysp

S.P. Velumani's said he helped Vijay

கரூரில் 41 பேர் உயிரிழந்த போது தவிக்கவிட்டு வந்தவர் தான் விஜய் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

Advertisment

நிகழ்ச்சி ஒன்றிய பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “இன்றைக்கு விஜய் புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவர் தான் பெரிய தலைவர் மாதிரி பேசுகிறார். அப்பப்போ பேசுகிறார், அப்புறம் வீட்டுக்கு போய்விடுகிறார், வெளியவே வர மாட்டிக்கிறார். யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கட்டும், ஆட்சிக்கு வரட்டும். எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆனால் அந்த ஆசை நியாயமான ஆசையா? தன்னுடைய சொந்த கட்சிக்காரர்கள் 41 பேர் இறந்துபோகிறார்கள், செத்து செத்து விழுகிறார்கள். அதை பார்க்காமல் அப்படியே போய்விட்டார், போனவர் திரும்பி வரவே இல்லை. என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும், உடனே மருத்துவமனைக்கு போயிருக்க வேண்டாமா? காப்பாற்ற வேண்டாமா?  நிறைய பேர் உயிருக்கு போராடிட்டு இருக்கும் அவர்களை பார்த்திருக்க வேண்டும். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

Advertisment

விஜய் எனக்கு நண்பர், அது வேறு. ஒரு படம் ரிலீஸ் பண்ண முடியவில்லை. நான் தான் எடப்பாடி பழனிசாமியிடம் அவரை அழைத்து போய் பேச உதவி செய்தேன், அப்புறம் தான் படம் ரிலீஸ் ஆனது. அது வேறு. ஆனால் மக்களுக்கு தலைவன் என்று சொல்லி கொண்டு வரும் போது மக்கள் உயிர்களை காப்பாற்ற வேண்டும். நம்முடைய இயக்கத்தில் இருப்பதே நிறைய பேருக்கு பெருமை. நிறைய பேர் இந்த இயக்கத்தை விட்டு பல கட்சிக்கு போகிறார்கள், போன வேகத்தில் திருப்பி வருகிறார்கள். இங்கு இருக்கிற மரியாதை எங்கேயுமே இருக்காது. விஜய் கட்சியில் இருந்து கூட நிறைய பேர் திரும்ப வருவதற்கு ரெடியாக இருக்கிறார்கள். பெயர் சொல்ல விரும்பவில்லை. பழைய பதவியை அளித்தால் மீண்டும் அவர்கள் அதிமுகவுக்கு வருவதற்கு தயாராக உள்ளனர்” என்று கூறினார். 

tvk vijay sp velumani
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe