தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு கடந்த 21ஆம் தேதி (21.08.2025) மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் நடைபெற்றது. சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்ற மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய்யின் பேச்சு தற்போது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

Advertisment

இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள குன்னத்தூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் கட்சியைத் தொடங்கியபோது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு கூடிய கூட்டத்தைவிட அதிகமாகக் கூட்டம் கூடியது. ஆனால் இன்றைக்கு அவரது (நடிகர் சிரஞ்சீவி) கட்சியே கலை இல்லாமல் கலைத்துவிட்டு போய்விட்டார். 

சாதாரண கட்சிக்குத் தலைவராக எடப்பாடி பழனிசாமி இல்லை. 53 ஆண்டுகள் பொன்விழா கண்ட கட்சி அதிமுக. எம்.ஜி.ஆரை அதிமுகவினர் மட்டும்தான் உரிமை கொண்டாட முடியும் ” எனப் பேசினார்.